திமுகவா? கொ.கொ.க.வா? வெடிக்கும் காயத்ரி ரகுராம்

 
sg

கடலூரை அடுத்து நெல்லை என்று தொடரும் திமுக எம்பிக்களின் அடாவடித்தனங்களால்,  இது திமுகவா அல்லது கொ.கொ.வா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.

கடலூர் மாவட்டத்தில் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு பணியாற்றி வந்தார்.  இவர் கடந்த 20ம் தேதி அன்று விஷம் குடித்து  தற்கொலை செய்துகொண்டதாக எம்.பி.  தரப்பில் சொல்லப்பட்டாலும், கோவிந்தராசுவின் உடல் முழுவதும் இருந்த காயங்களுடன் இரத்தக் கறைகளும் சந்தேகத்தை கொடுத்ததால் திமுக எம்பி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், மேலாளர்கள் அல்லாபிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து  அடித்து கொடுமைப்படுத்தியதாக குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

g

 கோவிந்தராசு மரணத்தில் சந்தேகம் இருந்ததால் அவரது உடலை தமிழகத்தில் பிரேத பரிசோதனை செய்தால் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது என்றுசொல்லி,  ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . உயர்நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது.   ஜிப்மரில் நடந்த பிரேத பரிசோதனையில் கோவிந்தராசு அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.   திமுக எம்.பி. ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.   இதை அடுத்து  ரமேஷ் தலைமறைவாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த நிலையில்தான்,  திமுகவால் வாக்குறுதியளிக்கப்பட்ட எந்த ஒரு அறிக்கையையும் மக்கள் பெறமாட்டார்கள்.   ஆனால் தமிழ் மக்கள் திமுகவிடம் இருந்து அச்சுறுத்தல்கள், கொலைகள், கொள்ளை மற்றும் திருட்டை மட்டுமே பெறுகின்றனர் என்று தெரிவித்திருந்தார் காயத்ரி ரகுராம்.  அவர் மேலும்,  திமுக எம்பி ரமேஷ் தலைமறைவாக உள்ளார். திமுக ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம் என்று கூறியிருந்தார்.

r

கடலூரை அடுத்து திருநெல்வேலியிலும் திமுக எம்.பியால் ஒருவர் கொலைவெறித்தனத்தோடு தாக்கப்பட்டிருக்கிறார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் வள்ளியூரை அடுத்த காவல் கிணறு அருகே ஏவிஎம் ஹோட்டலில் சாப்பிட்டு சாப்பிட்டு கொண்டிருந்த பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கர் மீதிஉ கொலை வெறி தாக்குதல் நடத்தினார் என்றும்,  அவரை அடித்து நொறுக்கியது மட்டுமன்றி அங்கிருந்த கேமராக்களையும் அடித்து நொறுக்கிவிட்டு சிசிடிவி கேமராவை எடுத்து சென்று விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

தாக்கப்பட்ட பாஸ்கரன் நேரடியாக மருத்துவமனைக்கு  செல்ல பயந்து நேரடியாக தன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.    செல்லும் வழியில் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவர் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லவில்லை.   மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் அவரை மறுநாள் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.

gn

 திமுக தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.   கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இதற்கு அடுத்ததாக திருநெல்வேலி எம்.பி. ஒரு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   பிரியாணி கடை முதல் டீக்கடை வரைக்கும் திமுகவின் அராஜகத்தையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.   எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் திமுகவினர்.  ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட அதே பழக்கத்தை தொடருகின்றனர்.   ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும் திமுகவின் அவருடைய வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவே இல்லை.   திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்போது வன்முறைக் கலாச்சாரத்தை கையில் எடுப்பது பற்றி நமக்கு ஆபத்தை விளைவிக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

pp

திமுக எம்.பி.ஞானதிரவியத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி முன்னாள் மத்திய துணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

st

இந்நிலையில், கடலூர் மற்றும் நெல்லை சம்பவங்களால் ஆத்திரப்படும் காயத்ரி ரகுராம்,  ‘’கொலை கொள்ளை கட்சி திமுக’’என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் மேலும்,  ‘’1. கடலூர் எம்.பி ரமேஷ் தலைமறைவானார் 2. திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் FIR.  ஐந்து மாத திமுக ஆட்சியுடன் மக்களுக்கு அச்சுறுத்தல்களை மட்டுமே கட்டவிழ்த்து விடுகிறது. அடுத்த 4 1/2 ஆண்டுகளில் அவர்கள் மக்களை தங்கள் அடிமைகளாக மட்டுமே ஆக்குவார்கள்’’என்று தெரிவித்திருக்கிறார்.