சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் இது தான் - சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி!

 
cv shanmugan

சரியான வியூகம் இல்லாததால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக திமுகவிடம் ஆட்சியை கோட்டைவிட்டது. 10 ஆண்டுகாலமாக தக்க வைத்திருந்த ஆட்சியை கைவிட்டதால் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெளியேறிவிட்டன. தேர்தலுக்கு முன்னதாகவே தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. சசிகலா வருகை, உட்கட்சி பூசல், ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. 

cv shanmugam

தற்போது உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் கூட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது. அதிமுக வாக்காளர்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது. நீதித்துறையும் நீதிபதிகளையும் திமுக மிரட்டுகிறது. அமைச்சர் பொன்முடி வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.