“செருப்ப கழட்டுனா தான் தடுப்பூசி போட்டுக்குவோம்” – பெண் மருத்துவரை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்!

 

“செருப்ப கழட்டுனா தான் தடுப்பூசி போட்டுக்குவோம்” – பெண் மருத்துவரை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி போடப்பட்டு தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வருகை தந்து மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்குப் பின் தடுப்பூசி செலுத்துகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள பொய்கை கிராமத்தின் முத்தாலம்மன் கோவிலில் தடுப்பூசி முகாம் நடைபெற்றத.

“செருப்ப கழட்டுனா தான் தடுப்பூசி போட்டுக்குவோம்” – பெண் மருத்துவரை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்!

இந்த முகாமிற்கு வேலூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ரெஜினா தலைமை தாங்கினார். அப்போது கோவில் கருவறைக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த சேரில் ரெஜினா செருப்பு காலோடு அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்து ஆத்திரடமைந்த ஊர்ப் பொதுமக்களில் சிலர் மருத்துவரை செருப்பை கழற்ற வேண்டும் எனவும் அப்போது தான் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்றார்கள். ஆனால் அதற்கு ரெஜினா மறுத்திருக்கிறார். பல்வேறு தரப்பினரும் முகாமிற்கு வந்துசெல்வதால் கொரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால் நான் செருப்பை கழற்ற மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரெஜினாவின் அறிவியல்பூர்வமான விளக்கம் மக்களின் சாமி நம்பிக்கைக்கு முன் தோற்றுப் போனது.

“செருப்ப கழட்டுனா தான் தடுப்பூசி போட்டுக்குவோம்” – பெண் மருத்துவரை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்!

மருத்தவர் மறுக்கவே அவரை வெளியேற்றா விட்டால் ஊசி போட்டுக்கொள்ள மாட்டோம் என பிடிவாதம் பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து கோவிலுக்கு அந்தப் பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர் ஆதி சிவா தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவர் பெண் மருத்துவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் கோவிலை அவமதிப்பதற்காகச் செருப்பு அணிந்து வரவில்லை என்றும், மாறாக கொரோனா நோய் தோற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால் தான் செருப்பு அணிந்துள்ளேன் என்றும் பெண் மருத்துவர் ரெஜினா விளக்கமளித்தார். இதனால் சமாதானமடைந்து அனைவரும் கலைந்துசென்றனர்.