நான் பதில் சொல்கிறேன்; அவர் பதில் சொல்கிறாரா? அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்

 
se

 நான் பதில் சொல்கிறேன்.  அவர் பதில் சொல்கிறாரா? என்று ஆவேசப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி,  நண்பர் மூலம் வந்தது என சொல்லி இருந்தால் பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும் என்று ஆத்திரப்பட்டார். 

 முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி கைத்தறி நெசவாளர்கள் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 26 நெசவாளர்களுக்கு வீடு கட்டும் ஆணையை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.  இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

as

அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு,   திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.  முதலில் ஊழல் பட்டியல் என்று சொல்லிவிட்டு ஊழல் பட்டியலை  வெளியிடுவதற்கும் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.   வேட்பாளர்கள் ஆக இருந்து சொத்து பட்டியலை தாக்கல் செய்து உள்ளார்கள். அப்போதே கேள்வி கேட்டு இருக்கலாம் . அதை வைத்து வழக்கு தாக்கல் செய்திருக்கலாம்.  அதையெல்லாம் விட்டுவிட்டு முதலில் சொன்னது ஊழல் பட்டியல் என்று சொல்லிவிட்டு எந்த ஆதாரமும் அடிப்படை தகுதியும் இல்லாமல் சொத்து பட்டியலை வெளியிடுகிறார் . 

அடுத்த முறை பார்க்கும் போது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு இந்த மாதிரி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆவேசப்பட்டவர்,   அவதூறு செய்தி பரப்புவோர் யாராக இருந்தாலும் சரி,  நீங்கள் சொல்கின்ற நபராக(அண்ணாமலை) இருந்தாலும் சரி,  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.   உண்மையிலேயே மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் மக்கள் தொடர்பான கருத்துக்களை தேவைகளை அரசுக்கு முன் வைக்கலாம் .  நீங்கள் குறிப்பிடும் நபர் ( அண்ணாமலை) ஒரு கோமாளி . பத்திரிகையாளர்களை கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு வீடியோ வெளியிடுகிறார்.   நீங்கள்(பத்திரிகையாளர்கள்) கேட்க வேண்டும்.   வீடியோவை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு போக வேண்டியது தானே.  நாங்கள் எங்களது வேலையை பார்ப்போமே என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

p

 என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்.  நான் பதில் சொல்கிறேன் . அவர் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாரா? நான் வாட்ச் பில் தான் கேட்டேன்.  முதல் நாள் கேள்வி கேட்கும் போது வாட்ச் நண்பர் மூலம்  எனக்கு வந்தது என சொல்லி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும் .  யார் யார் வாட்ச் வாங்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் தேடி பிடித்து அதில் ஒருவரை தனது நண்பராக்கி அவர் கொடுத்தார் என்று பல மாதங்களுக்கு பின்னர் சொல்கிறார். 

 அன்றைய தேதியில் 2 லட்சம் ரூபாய் அக்கவுண்டில் பணம் எடுத்து இருக்க வேண்டும் அல்லவா அப்படி ஆவணம் கொடுக்கவில்லை . இரண்டு லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கக் கூடாது என்று சட்டம் போட்டது யார்? அதை மீறியது எப்படி பணம் இந்த பணம் எப்படி வந்தது என்பதெல்லாம் புரியவில்லை என்று சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி ,   அதிக விலை கொடுத்து வாங்கிய வாட்ச் குறைந்த விலைக்கு யாராவது கொடுப்பார்களா ?ஒரு பொய்யை மறைக்க ஓர் ஆயிரம் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் .  நாட்டு மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்.  இவர்கள் எண்ணம் பலிக்காது என்று ஆவேசப்பட்டார்.