தடுத்தால் அந்த அதிகாரி இருக்க மாட்டான்! கரூரில் செந்தில்பாலாஜி சொன்னது தூத்துக்குடியில் உண்மையானதா?
திமுக ஆட்சியில் இருந்தபோது மணல் கொள்ளையினால் ஆற்றில் நீர் வரும்போது எல்லாம் கடைமடை வரை நீர் சென்று சேர முடியாத நிலை இருந்தது . இதனால் தான் அதிமுக ஆட்சி காலத்தில் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
None of the LEFT - Congress, Communist Environment Warriors would mind this, because it is done by DMK
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) March 17, 2021
Are you going to take some action @moefcc @prakashj ?@annamalai_k @CTRavi_BJP @blsanthosh @rvaidya2000 @amitmalviya @kishanreddybjp pic.twitter.com/7OibdVT8JL
இந்த நிலையில் தான் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை எப்படியும் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று நிறைய அறிவிப்புகளை தேர்தல் வாக்கு உறுதியாக வெளியிட்டது. அப்படி வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாட்டு வண்டியில் மணல் அள்ளுதவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் இப்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் 11 மணிக்கு பதவி ஏற்றால் நீங்கள் 11 5 மணிக்கு மாட்டு வண்டி எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு மணல் அல்ல செல்லலாம். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். அதையும் மீறி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டான் என்று பேசியது மக்களிடையே குறிப்பாக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.
இதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. சொன்னது மாதிரியே மணல் விவகாரம் இருக்கிறது என்கிறது பாஜக.
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கோவில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், தான் முன்பு பணியாற்றிய இடங்களிலும் தற்பொழுது பணியாற்றிய இடத்திலும் மணல் கனிம வளம் உள்ளிட்ட அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் பணியாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர். அவர், தான் பணியாற்றி வந்த முறப்பநாடு எல்லைக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மணல் கொள்ளையர்கள் அவரையே வெட்டி சாய்த்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’தளபதி 11.00 மணிக்கு பதவி ஏற்று கொள்வார். நீங்கள் 11:05க்கு மணல் எடுக்கலாம், அதை எந்த அதிகாரியாவது தடுத்தால் அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டான் என்று திமுக வின் இன்றைய அமைச்சர் ஒருவர் கூறியது தூத்துக்குடியில் உண்மையாகி இருக்கிறது.
சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம். இது தான் திராவிட மாடல் என்று பெருமிதம் கொள்வார்களா?’’என்று கேட்கிறார்.