திமுகவுக்கு போகிறாரா அன்வர்ராஜா?

 
w

 அதிமுகவின் தொடக்க காலத்திலிருந்து இருந்து வருபவர் அன்வர்ராஜா.  அக்கட்சியின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா அமைச்சராகவும்,  எம்பியாகவும் இருந்துள்ளார்.   அதிமுகவிலிருந்து பிரிந்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தைத் தொடங்கியபோது,   சசிகலா பக்கம் நின்றவர் அன்வர் ராஜா. 

 சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து கொண்டார்.    இதன் பின்னர் மீண்டும் ஓ.  பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு வந்து இரட்டை தலைமை என்று ஆனபோது அதை விரும்பாமல் அதைப்பற்றி  பொதுவெளியில் விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்தி வந்திருந்தார் அன்வர்ராஜா.  கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது .

இந்த நிலையில் சசிகலா தற்போது அதிமுகவிற்குள் வர தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அவரை அதிமுகவில் இணைத்துக் கொள்வதுதான் நல்லது. சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொண்டால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று பொதுவெளியில் பேசி வந்தார் அன்வர்ராஜா.  கட்சியிலுள்ள விவகாரங்களையும் பொதுவெளியில் பேசி வந்ததால் அன்வர்ராஜா மீது அதிமுக தலைமை கடும் கோபத்தில் இருந்து வந்தது.

r

 பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக தகவல்கள் வந்தாலும்,  நேரடியாக இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாங்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.  ஆனால் அதை பொதுவெளியில் போட்டு உடைத்த விட்டார் அன்வர்ராஜா.  இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். 

 சசிகலாவிற்கு ஆதரவாக இப்படி  பேசி வருவதால் அவரை அடிக்க எடப்பாடி பழனிச்சாமி ஆள் அனுப்பி இருப்பதாக ஒருவர் சொல்ல,  எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஒருமையில் பேச அந்த ஆடியோ வீடியோ கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.  இதனால் கடந்த 24ம் தேதி அன்று நடந்த மா.செக்கள் கூட்டத்தில் சிவி சண்முகம்  அன்வர்ராஜாவை அடிக்கப் பாயும் அளவிற்கு கலவரம் ஏற்பட்டது.  அதன் பின்னரும் கூட மௌனமாக இருக்கிறார்கள்.  

 அதிமுகவில் இருக்கும் எல்லோரும் சசிகலா காலில் விழுந்தவர்கள்தான் என்று சொல்லி தலைமைய மேலும் கடுப்பேற்ற,  இதன் பின்னரும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது என்றுதான் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.  72 வயதாகும் ராஜாவுக்கு,  அதிமுகவின் இரட்டை தலைமையும்,  சசிகலாவை கட்சியில் சேர்க்க மறுப்பதும் பிடிக்காமல் இருந்திருக்கிறது.

இதால்தான் அதிமுகவை விட்டு வெளியேற முடிவெடுத்து இருக்கிறார்.   அதனால்தான் உட்கட்சி விவகாரங்களை இப்படி பொதுவெளியில் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.  அவர் நினைத்த மாதிரியே கட்சியை விட்டு அவரை நீக்கிவிட்டார்கள்.  இனியும் அவர் நினைத்த மாதிரியே திமுகவில் ஐக்கியமாகி விடுவார் பேச்சு எழுந்திருக்கிறது.