வாயை மூடிக்கிட்டிரு... பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

 
p

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,  பஸ்ஸில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? ஓசி பஸ்ஸில் போகிறீர்கள் என சொல்லி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

 அந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர்களும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.  இதை அடுத்து விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடியிடம் பெண்கள் குறைகளை கூறிய போது , இந்த கிராமத்தில் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. பெருசா கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க.. என்று அதட்ட,   பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறை சொல்லிய ஒரு பெண்ணை வாயை மூடிக்கிட்டு இரு என்றுஅமைச்சர் பொன்முடி அதட்டியதால் சலசலப்பு எழுந்திருக்கிறது.

pon

 விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசிய போது, நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன.  பல பணிகள் நடக்கின்றன.  கிராமங்களிலும் நகரங்களிலும் பல பணிகள் நடந்து வருகின்றன.  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் நேருவின் மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

 சென்னையாக இருந்தாலும் சரி , திருக்கோவிலூர் ஆக இருந்தாலும் சரி,  விழுப்புரம் ஆக இருந்தாலும் சரி... என்று அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு பெண் எழுந்து குறைகளைச் சொன்னார்.  அவரை பார்த்து கேலி செய்த அமைச்சர் பொன்முடி,   ‘’வாயை மூடிக்கிட்டுரு..’’ என்று அதட்டினார்.  பின்னர் அந்த பெண்ணிடம்,  ’’உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா?’’ என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் சொன்ன பதிலை கேட்ட பின்னர்,  ’’போயிட்டாரா.. பாவம்..’’ என சிரித்துக் கொண்டே சொன்னார். 

 அப்போது தொண்டர்கள் சத்தம் போடத் துவங்கினர்.  உடனே அமைச்சர் பொன்முடி , அமைதியாக இருக்கும் படி கூறி,  அந்த அம்மா குறை சொல்லுது நல்லது தானே என சொல்லி சமாளித்து தன் பேச்சை தொடர்ந்தார்.