கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோவில் இருப்பது என் குரல்தான் - கேபி முனுசாமி

 
kp munusamy

எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ.1 கோடி கேட்டதாக கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி குற்றஞ்சாட்டினார். இதுகுறித்த ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். 

kp munusamy

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கேபி முனுசாமி, “இரட்டை இலை சின்னம் வெற்றிபெற, அதிமுகவின் தொண்டர்கள் உழைக்கிறார்கள், ஓபிஎஸ்-ஆல் உழைக்க முடியுமா? அவர், அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார். எனவே மீண்டும் கட்சியில் சேர்க்கவாய்ப்பில்லை” என்றார். 

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கேபி முனுசாமி என்னிடம் ரூ. 1 கோடி கேட்டார், இதுதொடர்பாக கேபி முனுசாமி ஆடியோவை இப்போது வெளியிட்டுள்ளேன், அமைதியாக இல்லை என்றால் வீடியோ வெளியிடுவேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். ஈபிஎஸ்-க்கு இது தெரிய வேண்டாம் என்றும், ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் தற்போது இதை வெளியிடுகிறேன் என்றும் கேபி முனுசாமி கூறினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கேபி முனுசாமி, “கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை. தோல்வி பயத்தில் திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் அடமானம் வைக்க பார்த்தார்” எனக் குற்றஞ்சாட்டினார்.