“ஏ ,பி படிவங்களில் கையெழுத்திட மறுத்த ஈபிஎஸ்- திமுகவுக்கு துணைப்போகும் செயல்”

 
Stalin

வேட்பாளர்களுக்கான ஏ , பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட மறுத்தது  திமுகவிற்கு துணை போகும் வகையில் உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளரான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா, டிடிவியை விரட்டுனீங்களே.. அதே நிலைதான் உங்களுக்கும் வரும்..  இபிஎஸ்ஸுக்கு "குன்னம்" அறிவுரை | Kunnam Ramachandran says that We need  double leadership - Tamil Oneindia

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக மூத்த தலைவர் ஓ .பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளரான பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு இல்லை என கூறி ஈபிஎஸ் தரப்பினர் எங்களது கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டனர். தொண்டர்களை ஏமாற்றவே இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திமுகவிற்கு துணை போகும் வகையில் ஏ. பி.படிவத்தில் கையெழுத்திடவில்லை. தலைமைக் கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கையெழுத்து வழங்கிவிட்டார். ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர் இன்னும்  கையெழுத்திடவில்லை. எனவே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜெயலலிதா இல்லத்தை  கட்சிக்கு வழங்க தயாராக இருப்பதாக தீபா , தீபக்  இருவரும் பன்னீர்செல்வத்திடம் வந்து கூறினர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதற்கு அவர் செவிக்கொடுக்கவில்லை. ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பார்வைக்கு வைக்க ஒருங்கிணைப்பாளருக்கு ஏன் இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஒத்துழைப்பு தரவில்லை.ஜெ. இல்லத்தை பெறுவதில் நிதிச் சிக்கல் இருந்தால் என் சொந்த பணம் 10 லட்சத்தை கட்சிக்கு வழங்க தயாராக உள்ளேன். வேலுமணிக்கு சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதுதற்கு ஓபிஎஸ்  திமுகவுடன் இணக்கமாக இருப்பதாக கூறுவது தவறு. 

ஓபிஎஸ்-க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் திட்டத்துடன் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இவ்வாறு கூறுகின்றனர். அதிமுக சின்னத்தை எதிர்நோக்கி இருந்த தொண்டர்கள் சுயேட்சையாக போட்டியிடும் நிலையை உருவாக்கியவர் எடப்பாடி .கடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்களின் பதவியை மட்டுமின்றி , தீர்மானங்களை நிராகரித்தாதல் கட்சியின் அத்தனை பதவிகளும் ரத்தாகிவிடும் என்று கூட அர்த்தம் இருக்கிறது.சசிகலா பொதுச்செயலாளர் ஆனவுடன் , ஓபிஎஸ் தர்மயுத்தத்தின் போது பொதுச்செயலாளர் இல்லாதபோது அவைத்தலைவர் , பொருளாளருக்கே கட்சியும் ,  சின்னமும் செல்லும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன் மூலம் தற்போது ஓபிஎஸ் ஒற்றைத் தலைவராக வாய்ப்பு கூட இருக்கிறது. கட்சிக்கு இறங்கு முகம் ஏற்படுத்தும் செயலை தவிர்க்க இருவரும் அமர்ந்து ஒன்று கூடி பேசி முடிவெடுக்க வேண்டும். மனோஜ் பாண்டியன் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நேற்று பேசினார். அப்போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவதே செல்லும் எனவும் , இருவரும் ஒப்புதல் தந்தால் மட்டுமே சின்னம் வழங்குவோம் என்று கூறி உள்ளனர். 11 ம் தேதி பொதுக்குழு நடந்தால் அது ஈபிஎஸ்க்கான புகழஞ்சலி கூட்டமாகவே இருக்கும்” என்று கூறினார்.