இந்த முதற்கட்டத்தைக் கொண்டாடலாம்; இறுதி முடிவை கொண்டாட முடியாது -திருமாறன் பரபரப்பு
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கும் நிலையில், எடப்பாடி ஆதரவாளர்கள் அதை கொண்டாடி வரும் நிலையில், இந்த வழக்கின் முதற்கட்டத்தை கொண்டாட முடியும். ஆனால் இறுதி முடிவை கொண்டாட முடியாது என்கிறார் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைநோக்கியபோது ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று இரு அணியாக அதிமுக பிரிந்தது. அந்த நேரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டினார். அதில் தனது ஆதரவாளர்களை திரட்டினார். தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம் ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்கள்.
இதை அடுத்து இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று அதிமுக பொதுக்கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து திருமாறன் செய்தியாளர்களிடம் பேசிய போது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பொதுக்குழுவின் முடிவே முடிவு செல்லும் என்றால் அவர்களது வழக்கு தானாகவே வென்றிருக்கும். இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்வதை கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளும்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து ஒன்று இருக்கும் வரை நாங்கள் எங்களின் கருத்தில் உறுதியாக நிற்போம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற வரையில் எங்களின் உத்தரவை கேட்டுப் பெரும் உரிமை இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பெறாமல் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதனால் தான் எடப்பாடி தரப்பினர் இந்த வழக்கில் முதற்கட்டத்தை கொண்டாட முடியும். ஆனால் இறுதி முடிவு கொண்டாட முடியாது என்று அழுத்தமாகச் சொன்னார்.