சதிவலையை அறுத்தெறிவோம் -ஜெ., சமாதியில் ஓபிஎஸ் முழக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதை முன்னிட்டு அமைச்சர்களும் தொண்டர்களும் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுகவினர் ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை செய்தார்கள்.
மலர்தூவி நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். தீயசக்தி தீண்டாமல், தமிழ்நாடு தலைநிமிர உறுதி ஏற்கிறோம். அம்மா தந்த அழகான தமிழ் நாடு, வளமான தமிழ்நாடு, கொலையில்லை கொள்ளை இல்லை ,
மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதை மீண்டும் அமைப்பதற்கு, ஓய்வின்றி உழைப்பதற்கு உறுதியேற்கிறோம். நம் கழகத்தை அழித்திடலாம் என, பகல்கனவு காண்போரின் சதிவலையை அறுத்தெறிவோம் என உறுதி ஏற்கிறோம்! என்று முன் மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர்.