சினிமா காட்சி போல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்களை அடித்த அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்

 
po

திருச்சியை மிரள வைத்திருக்கிறார்கள் அமைச்சர் கே. என். நேரு மற்றும் திருச்சி சிவா எம். பி ஆதரவாளர்கள்.  இதனால் இரு தரப்பினர்  மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இருதரப்பிற்கும் இடையே நடந்த மோதல் காரணமாக இன்று திருச்சி சிவா எம்பி மீது எம் பி வீடு நடந்த தாக்குதல் தொடர்பாக,  சினிமா காட்சி போல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்களை அடித்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

sr

 திருச்சி மாநகராட்சியில் பிராட்டியூர் கண்டோன்மென்ட் எஸ். பி. ஐ காலனியில் சண்முகா நகர் ஆழ்வார் தோப்பு மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசியல் திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.   திருச்சி சிவா எம். பி. வீடு அமைந்திருக்கும் எஸ்பிஐ காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்க  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு,  ஆட்சியர் பிரதீப் குமார்,  மாநகராட்சி ஆணையாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் சென்றார்கள். 

அப்போது திருச்சி சிவா எம். பி யின் வீட்டின் அருகில் சிலர் நின்று கொண்டு,  அமைச்சர் நேருவின் காரை திடீரென்று வழிமறித்து அவருக்கு கருப்பு கொடி காட்டினார்கள்.   இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத திமுகவினர் அதிர்ச்சி அடைந்தார்கள் .  போலீசாரும் அங்கு ஓடிச் சென்று நிலைமையை சமாளித்தனர்.  

 ஏன் இந்த எதிர்ப்பு என்று விசாரித்த போது? எஸ். பி. ஐ காலனி நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டியது தெரிய வந்திருக்கிறது.   இந்த சம்பவம் அமைச்சர் நேருவின் ஆதரவாளருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

c

 இதனால் சிவா எம்பி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்,  இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.  கற்கள் , சவுக்கு கட்டைகளைக் கொண்டு வீட்டு காம்பவுண்ட் சுவர் முகப்பு விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன.  இந்த சம்பவத்தால் எஸ்பிஐ காலணி பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.  இதனால்  சிவா எம்பி வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருக்கிறார்கள்.

sn

 இந்த சூழலால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.   அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய 10 பேரை திருச்சி ஸ்பெஷல் கோர்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.   அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள்  காவல் நிலையம் முன்பாக திரண்டார்கள் . சிலர் திடீரென்று காவல் நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்தார்கள்.  பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த சிவா எம்பியின் ஆதரவாளர்களை தாக்கி இருக்கிறார்கள்.  இந்த களேபரத்தினால் காவல் நிலையத்தினைச் சுற்றி கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  திமுகவில் நடந்து வரும் இந்த உட்கட்சி மோதலால் திருச்சி திமுகவில் பெரும் பரபரப்பு/ சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.