அந்த வீடியோ.. கத்திமுனையில் பேசவைத்தார்கள் - கலைச்செல்வி அடித்த அந்தர்பல்டி
இளம்பெண்ணை வைத்து திமுக பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்கும் திமுக பிரமுகர் பற்றிய புகாரினால் சேலம் மாவட்டம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டிருந்தார் கலைச்செல்வி. தற்போது அவர் அந்தர்பல்டி அடித்திருக்கிறார். அந்த வீடியோவை கத்திமுனையில் மிரட்டி எடுத்தார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி இடங்கணசாலை பேரூராட்சியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். திமுகவின் இடங்கணசாலை பேரூர் செயலாளராக பதவி வகித்து வரும் இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், கடந்த 25 வருடங்களாக திமுகவில் கட்சி பணி செய்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் செல்போன் மூலம் எனக்கு அறிமுகமானார். அவர் தனியார் நில விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவரிடம் ஏராளமான நிலங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் சொன்னார். அதை அடுத்து நேரிலும் என்னிடம் அன்பாக பழகினார்.
பின்னர் தனது குடும்ப சூழ்நிலையை காரணம் சொல்லி என்னிடம் ஐந்து லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். இந்த நிலையில் கலைச்செல்வி பழகிய நாட்களில் நான் தவறாக பழகினேன் என்று சொல்லி, போட்டோ- வீடியோ ஆதாரம் உள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது . என்னிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அதனால் அவரிடமிருந்து என்னை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார் .
இந்த புகாரின் பேரில் போலீசார் கலைச்செல்வியை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாக கேள்விப்பட்டு, நான் தனிப்படை அமைத்து தேடும் அளவுக்கு வொர்த் இல்லை என்று வீடியோவில் பேசியிருந்தார் கலைச்செல்வி. இதுகுறித்து அவர், சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் தான் இப்படி நடந்து கொண்டேன். வேலை வாங்கித்தருவதாக சொன்னதால், நாகேந்திரனிடம் பேசச்சொன்னார் செல்வம். அவரேதான் கேமரா செட் பண்ணி வீடியோ எடுத்தார். அந்த ஆதாரத்தை எல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டுமென்று என்னை சென்னை அழைத்துச்சென்றார். கடைசியில் என்னை மாட்டிவிட்டிருக்கிறார் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அந்த வீடியோவில் கத்திமுனையில் என்னை மிரட்டியதால் தான் அப்படி சொன்னேன் என்று சொல்லியிருக்கிறார். ரூபன், ரமேஷ் இருவரும் அந்த வீடியோவை வைத்து அரசியல் பிரமுகர்களிடம் இருந்து பணம் வாங்கி தரும்படி அடிக்கடி செல்போனில் மிரட்டுவதாகவும் செல்போன் எண்ணை மாற்றியதால் நேரில் வந்து மிரட்டுவதாகவும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார் கலைச்செல்வி .
அந்த வீடியோவில் கலைச்செல்வி குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகரி ஒருவர் நாகேந்திரன் என்பவர் கலைச்செல்வி மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் கலைச்செல்வி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கலைச்செல்வி இப்படி புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் என்பதை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
கலைச்செல்வி இப்படி என் திடீர் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார் என்று சேலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.