செங்கோட்டைக்கு செல்லவேண்டிய அண்ணாமலை வழிமாறி ஜார்ஜ் கோட்டைக்கு சென்றுள்ளார்- மாணிக்கம் தாகூர்
தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் செங்கோட்டைக்கு சென்று மோடி அரசை எதிர்த்து அண்ணாமலை போரடவேண்டும் என விருதுநகர் எம்பி மாணிக்கதாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவின் மாநில பொதுக்கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாநில ஓபிசிஅணி தலைவர் நவின் வரவேற்புரை கூறினார். காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மாநில துணை தலைவர் ரோசன் பூசைய்யா. விழாவிற்கு தலைமையேற்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் தீர்மானம் மொழிபெயர்ப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், “பேரறிவாளன் குற்றமற்றவன் போல சீமான் உள்ளிட்ட கட்சிகள் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. பேரறிவாளன் விடுதலை என்பது மன வேதனையை தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதைக் கொண்டாடுவது வருத்தத்துக்குரியது. பேரறிவாளன் குற்றமற்றவன் என நீதிமன்றம் சொல்லவில்லை, குற்றவாளி என்று தான் சொல்கிறது. பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் எந்த கட்சியாக இருந்தாலும் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களுக்கும் இந்தியா மக்களுக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும்.
2014-ல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு மோடி அரசு வந்தவுடன் பெட்ரோல் விலையை வானளாவிய உயர்த்திய பெருமையை மோடி அரசு பெற்றுள்ளது. தமிழகத்தில் மாநில அரசு பெட்ரோல் விலையை ஒரு வருடங்களாக உயர்த்தவே இல்லை. அண்ணாமலை மோடி அரசை எதிர்த்து போராட வேண்டும். செங்கோட்டைக்கு செல்லவேண்டிய அண்ணாமலை வழிமாறி ஜார்ஜ் கோட்டைக்கு சென்றுள்ளார். தமிழக மக்கள் மீது உண்மையான அன்பே இருந்திருந்தால் 75 ஏக்கர் நிலம் வைத்துள்ள அண்ணாமலை செங்கோட்டை சென்று மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்” எனக் கூறினார்.