2024 தேர்தலில் எடப்பாடிக்கும் சீமானுக்கும் தான் போட்டி: மருது அழகுராஜ்

 
மருது அழகுராஜ்

2024 தேர்தலுக்கு பின் எடப்பாடி காணாமல் போவார், 2024 தேர்தலில்  எடப்பாடிக்கும் சீமானுக்கும் தான் போட்டி என ஓபிஎஸ் அணியின் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

மருது அழகுராஜ்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஓபிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அசோகன் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் சிறப்புரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜ், “2024 தேர்தலுக்கு பின் எடப்பாடி இல்லாமல் அதிமுக ஒன்றினையும், 2024 தேர்தலில் சீமானுக்கும் - எடப்பாடிக்கும் தான் போட்டி நடைபெறும். விசுவாசத்திற்காக பாஜக உடன் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆதரவு அளிப்பது உறுதி. 

எடப்பாடிக்கு மதுரைக்கு வந்தாலே பதட்டம், படபடப்பு வந்து விடும்.  அந்த வகையில் நேற்று அவர் வாயாலேயே தவழ்ந்து வந்து பதவி பெற்ற உண்மையை கூறி இருக்கிறார். தொடர்ந்து கூவத்தூரில் நடந்தது, கொடநாட்டில் என்ன நடந்தது, என்பதையும் அவர் வாயாலேயே சொல்வார். ஓபிஎஸ் அவர்கள் ஆற்றாமையின் காரணமாகத்தான் தான் மனம் திறந்தால்  எடப்பாடி திகார் செல்வார் என்று கூறியுள்ளார். ஓபிஎஸ் அணி பாஜக உடன் கூட்டணி அமைப்பது உறுதி” என்றார்.