முதல்வர் மனைவி காலில் விழுந்த அமைச்சர் பிகே சேகர்பாபு
முதல்வர் மு. க. ஸ்டாலின் மனைவி காலில் விழுந்து அமைச்சர் பி. கே. சேகர்பாபு வணங்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது . இதனால் அரங்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது .
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுகவின் சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இதில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். அமைச்சர்கள் பிகே சேகர்பாபு , மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழாவில் முன்னிலை வைத்தனர் .
70 திருமண ஜோடிகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 4 கிராம் தங்க தாலி ,கட்டில் ,மெத்தை ,பீரோ , மிக்சி, கிரைண்டர் உட்பட 36 வகையான சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணங்களை நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக பெரிய கடிகாரம் மற்றும் பட்டுச்சேலை பரிசளித்தார் அமைச்சர் பி. கே. சேகர் பாபு.
அப்போது துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கினார் அமைச்சர் சேகர்பாபு. அமைச்சரின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு இருந்தது.