பாஜக போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இந்தியாவிலேயே இல்லை - அமைச்சர் ரகுபதி

 
ரகு

அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியுள்ளார், மடியில் கனமில்லை எங்களுக்கு வழியில் பயமில்லை என
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது: அமைச்சர் ரகுபதி | Minister  ragupathi said government will not delay arrest of H.raja

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஜூன் மூன்றாம் தேதி நேற்றைய தினம் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உள்ளிட்ட 23 குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ் ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், காவல்துறை ஐபிசி படி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது.எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி பெற முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம். எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே பாஜக போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்றைய தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடினர்.  அதற்கு ஐந்து பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வெளியில் உள்ள நபர்களை அழைத்து வந்து நேற்று இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர் காவல்துறையினர் இதற்கு வழக்கு பதிந்து இருக்க வேண்டும். ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிய வில்லை. மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும். புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தில் அந்த சங்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசு அதற்கு துணை நிற்கும்.

கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம். இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டுதான் உள்ளோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது. அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியுள்ளார். மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கு வழியில் பயமில்லை” என்று தெரிவித்தார்.