"சோத்துல உப்பு போட்டு தின்னா" - அண்ணாமலையை திட்டி தீர்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

 
அண்ணாமலை

புதிதாக திமுக ஆட்சி வந்த பிறகு மின்சாரத் துறையில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இதனால் கோபமடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்தை வெளியிட வேண்டும். பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். முறைகேடு நடந்ததை அவர் நிரூபிக்கவில்லை என்றால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சவால் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் எக்ஸல் சீட்டில் அவரே உருவாக்கிய ஆதாரத்தை வெளியிட்டார். 

செந்தில்பாலாஜி

இதனால் அவரை எக்ஸல் சீட் அண்ணாமலை என நெட்டிசன்கள் ஹேஸ்டேக் போட்டு வறுத்தெடுத்தார்கல். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறி அண்ணாமலை கேட்க வேண்டுமென அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். ஆனால் ஏற்க மறுத்த அண்ணாமலை மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்றார். மேலும் செந்தில் பாலாஜி 4% கமிஷன் அடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இச்சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செந்தில்பாலாஜியிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நேற்றே இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். 

நாலா பக்கமும் கத்தி.. உடைக்கப் பார்க்கும் கூட்டணி! - என்ன செய்யப் போகிறார்  அண்ணாமலை? | what are the challenges annamalai going to facing in bjp?

பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன். நல்ல மனிதராக, சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுகிற ஆளாக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட அவர் பேசுகின்றார். இருப்பை காட்டுவதற்காக சிலர் பேசுவதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்றார். மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக இருப்பதாகவும் மிக விரைவில் நிரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.