உட்கட்சி மோதலில் அமைச்சரின் ஆதரவாளர் காயம் - தீர விசாரிக்கும் முதல்வர்

 
ச்ட்2

 முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினை வரவேற்க திரண்டிருந்த திமுகவினரிடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் ஏற்பட்டதில் அமைச்சரின் ஆதரவாளர்  கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறார்.  அவருக்கு ஆறுதல் சொன்ன முதல்வர்,  உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.  நடந்தது குறித்து  தீர விசாரிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ன்

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றிருக்கிறார் .  சென்னையிலிருந்து அவர் தாம்பரம் வழியாக  சென்றதால்,  தாம்பரம் திமுக சார்பில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் நடந்துள்ளன.   தாம்பரம் நகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும், டி.ஆர்.பாலுவுன் ஆதரவாளரான எஸ். ஆர். ராஜா தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை வரவேற்க திரண்டு வந்திருக்கிறார். 

 அதேபோல் அமைச்சர் தாமோ அன்பரசனின் ஆதரவாளரும்,  காங்கிரஸ் ,தமாகா, அதிமுக ,அமமுகவில் இருந்து  திமுகவிற்கு வந்திருக்கும் தாம்பரம் நாராயணன்  தனது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்திருக்கிறார். இதில் நாராயணனும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலினை வரவேற்க முன்னே வந்து நிற்க,  இதில் ஆத்திரமான ராஜா ஆதரவாளர்கள் அவர்களை பிடித்து தள்ள, இதில் மோதல் ஏற்பட்டு நாராயணன் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். 

ச்ர்

 இந்த தாக்குதலில் தாம்பரம் நாராயணன்  முகத்தில் விழுந்த குத்தினால் கண்கள் வீங்கி இருந்திருக்கின்றன.  அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் வந்திருக்கிறார். அவரிடம் ஓடிப்போன தாம்பரம் நாராயணன் ஆதரவாளர்கள்,  உங்களை வரவேற்க வந்த நாராயணனை ராஜா ஆதரவாளர்கள் அடித்துவிட்டார்கள்  என்று சொல்ல, நாராயணனை அழைத்து விசாரித்த முதல்வர்,  உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.  நான் என்ன நடந்தது என்பது குறித்து தீர விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மேல்மருவத்தூருக்கு சென்றிருக்கிறார்.

 இந்த தாக்குதலின் பின்னணி குறித்து தமிழக முதல்வரிடம் தாமோ அன்பரசன் விளக்கம் அளித்து இருப்பதாகவும்,   டி. ஆர். பாலு மூலமாக எஸ்.ஆர்.ராஜா முதல்வருக்கு விளக்கமளிக்க முயல்வதாகவும் தகவல்.