இந்தியாவிலேயே அதிக மக்கள் செல்வாக்குள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் - சர்வே முடிவுகள்

 
vv

இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் இடம் பெற்றிருக்கிறார்.

 சி.என். ஓ.எஸ்.ஒபினியோம் என்கிற அமைப்பு இந்தியாவின் முதலமைச்சர்களில் செல்வாக்கு குறித்து நடத்திய சர்வே முடிவில்  சிறந்த முதலமைச்சராக 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.   அந்த 5 முதலமைச்சர்களில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலிடம் பெற்று இருக்கிறார்.

 இது குறித்து சர்வே நடத்திய சி.என். ஓ.எஸ்.ஒபினியோம் அமைப்பு தெரிவித்துள்ளதாவது:    தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக திகழ்கின்றார்.  இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றிருக்கும் நிகர புள்ளிகள் 67 ஆகும்.   அவருடைய  தமிழ் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களில் 79 சதவிகிதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.   12 சதவிகிதம் பேர் மட்டுமே அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.  

ccc

 மேலும் இந்த கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவிகிதத்தில் திருப்தியில்லை என்று கூறுபவர்களை கழித்து மீதமுள்ளவர்களே நிகர ஆதரவாளர்களாக கணக்கிடப்படுகிறது.  அதன்படி பார்த்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் நிகர புள்ளிகள் 67  பெற்று இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக முதலிடம் பிடித்திருக்கிறார்.

 தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார்.  அடுத்ததாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடமும்,  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 4வது இடமும், அசாம் முதலமைச்சர் ஹேமந்த் 5வது இடமும் பிடித்துள்ளனர்.