ஆட்டோவில் வந்து ஓபிஎஸ்-இபிஎஸ்ஸிடம் விளக்கம் அளித்த நவநீதகிருஷ்ணன்

 
op


 ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தின் தலைமை  அரசு வழக்கறிஞராக இருந்தவர் நவநீதகிருஷ்ணன்.   அவர் 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   தற்போது வரை அவர் மாநிலங்களவை எம்பியாக இருந்து வருகிறார்.  

 இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முறையிடுவதற்காக  திமுக எம்பிக்கள் குழு சென்றபோது அந்த குழுவில் நவநீதகிருஷ்ணன் பங்கேற்று அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார். 

na

 இதற்கு அடுத்தபடியாக திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்று , அதுவும்  திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த அந்த திருமண நிகழ்வில் பங்கேற்று,   நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தான் கற்றுக் கொடுத்தார் என்றும்,  கனிமொழி தான் நாடாளுமன்றத்தில் தனது வழிகாட்டி என்றும் புகழ்ந்து பேசி இருந்தார்.

 அவருடைய பேச்சு அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.   முக்கிய நிர்வாகிகள் பலரையும் டென்ஷன் ஆக்கியது.   இதனால் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

 இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது,   அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய நவநீதகிருஷ்ணன் எம்பி,   ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரையும் சந்தித்து தன்னுடைய விளக்கத்தை தெரிவித்திருப்பதாக தகவல்.    கடிதம் வாயிலாக தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் என்று தகவல் .