கெஜ்ரிவால் பணக்காரர்களுக்கு வரி விதித்து, அந்த பணத்தில் குடிசை பகுதிகளில் இலவச மின்சாரம் வழங்குகிறார்.. சித்து

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பணக்காரர்களுக்கு வரி விதித்து, அந்த பணத்தில் குடிசை பகுதிகளில் இலவச மின்சாரம் வழங்குகிறார் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் பஞ்சாப் சென்று இருந்தார். அப்போது, எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களிலும் போட்டியிடும் என்றும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். மேலும், எங்க கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசியல் தலைவர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும், சாமானியர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவாலின் இலவச மின்சாரம் வாக்குறுதியை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர். அவர் பணக்காரர்களுக்கு வரி விதித்து, அந்த பணத்தில் குடிசை பகுதிகளில் இலவச மின்சாரம் வழங்குகிறார். 

நவ்ஜோத் சிங் சித்து

நீங்கள் (அரவிந்த் கெஜ்ரிவால்) இந்த லாலிபாப்பை மக்களுக்கு எப்போது வழங்க போகிறீர்கள்? இது பஞ்சாபில் வேலை செய்யாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை (காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி)  போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.