அதிமுகவில் இணைகிறார் நயினார் நாகேந்திரனின் சகோதரர்

 
அதிமுகவில் இணைகிறார் நயினார் நாகேந்திரனின் சகோதரர் 

பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீர பெருமாள் மற்றும் தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

தமிழக பா.ஜ.த துணைத்தலைவரும், சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் சகோதரர் நயினார் வீரப்பெருமாள் அதிமுகவில் இணைகிறார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், தன்னை அதிமுகவில் அவர் இணைத்துக் கொள்ள உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார். அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், நாகேந்திரனின் சகோதரர் கட்சி மாறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் அதிமுகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது என்றார்.

admk bjp

 இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக சமூக வலைதளங்களிலோ ஊடகங்களிலோ கூட்டணி மற்றும் பாஜக குறித்து விமர்சிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பாஜக - அதிமுக கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை என அதிமுக தரப்பிலிருந்து செல்லூர் ராஜூவும், பாஜக மாநில தலைவர் அன்ணாமலையும் அண்மையில் பேட்டியளித்தார்.