ஓபிஎஸ் இருக்கை! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அப்பாவு

 
ee

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் பன்னீர்செல்வத்திற்கும் பழனிச்சாமிக்கும் இடையே இன்னும்  மோதல் நீடித்து வருகிறது.   எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத் தலைவராக தனது ஆதரவாளர் உதயகுமாரை அறிவித்தார்.  ஆனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பன்னீர் செல்வத்திற்குத் தான் ஒதுக்கப்பட்டு வருகிறது.

ou

தற்போது அதிமுக கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 இந்த நிலையில்,  நெல்லை மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது.  இதை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானத்தின்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கியதை செல்லும் என அறிவித்துள்ளது.  இதை அடுத்து சட்டமன்றத்தில் அதிமுகவின் உறுப்பினராக இருக்கையில் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன? எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை யாருக்கு ஒதுக்கப்படும்? என்பது குறித்து  கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.

app

 அதற்கு அப்பாவு,   நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை . சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது . சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவரின் முழு பொறுப்பாகும் . உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.