பிரதமர் மோடி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கடும் தாக்கு

 
mo

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே எல்லா தீர்ப்புகளும் எப்படி வருகின்றன என்று கேள்வி எழுப்பி,  நீதிமன்றத்தின் மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதும் சந்தேகத்தை எழுப்பி இருந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.   இந்நிலையில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து மக்களவையில் அவரை தகுதி நீக்கம் செய்ததற்கு மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

aa

*தீர்ப்பும் திகைப்பும்*  என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதாவது:

மாநிலத்தை ஆள்வோருக்கு காவல்துறை ஆயுதம் என்றால்..
மத்தியில் ஆள்வோருக்கு 
சி.பி.ஐ.
அமலாக்கப்
பிரிவு
வருமான
வரித்துறை
என
கூடுதலாக
ஆயுதக்
குவியல்கள்...
இதில்
மக்களின்
கடைசி
நம்பிக்கையான
நீதித்
துறையும்
சேர்ந்து
விட்டதோ
என்னும்
சந்தேகம்
நாளுக்கு
நாள்
வலுத்துக் கொண்டே
வருகிறது..
ஆம்...
காந்தி குடும்பம்
என்று
நேருவின்
வகையறாக்களை
கொத்தாக
சேர்த்து
விமர்சிப்பதற்கு
உரிமை
கொண்டவர்களை
நீரவ் மோடி
லலித் மோடி
என்னும்
நாணயமற்ற
காரியத்தை
செய்து விட்டு
நாடு விட்டு
ஓடியவர்களோடு
அதனை
தடுக்காத
பிரதமர்
மோடியையும்
சேர்த்தார் போல்
சிலேடையில்
விமர்சித்த
ராகுலுக்கு
மட்டும்
எம்.பி.பதவியை
பறிப்பதற்கு
ஏதுவாக
இரண்டாண்டுகள்
சிறைத்
தண்டனை
என்றால்..
தீர்ப்பால்
தண்டனையா
இல்லை
தண்டனைக்காக
தீர்ப்பா என
மக்கள்
இதனை
மனட்சாட்சி
கொண்டு 
உரைகல்லாக
நின்று
உரசிப் 
பார்ப்பார்கள்
தானே..
என்ன நாஞ் சொல்றது..