2024 தேர்தலுக்கு முன் இன்னும் நவீன உளவு சாப்ட்வேர் கிடைத்தால் 400 கோடி டாலர் கூட கொடுக்கலாம்.. ப சிதம்பரம்
2024 தேர்தலுக்கு முன்பாக இன்னும் அதிநவீன உளவு சாப்ட்வேர் கிடைத்தால், அவர்களுக்கு (இஸ்ரேல்) 400 கோடி டாலர்கள் கூட கொடுக்கலாம் என பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசை ப.சிதம்பரம் கிண்டலடித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, 2017ல் பிரதமர் மோடியின் இத்தாலி பயணத்தின் போது, இந்தியா-இஸ்ரேல் இடையே அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த ஒப்பந்தத்தில் பெகாஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தததாக குறிப்பிட்டு இருந்தது. இதனையடுத்து பெகாசஸ் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், கடைசி ஒப்பந்தம் 200 கோடி டாலர். இந்தியா இந்த முறை சிறப்பாக செயல்பட முடியும். 2024 தேர்தலுக்கு முன்பாக இன்னும் அதிநவீன உளவு சாப்ட்வேர் கிடைத்தால், அவர்களுக்கு 400 கோடி டாலர்கள் கூட கொடுக்க முடியும்.
இந்தியா-இஸ்ரேல் உறவில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கான சிறந்த நேரம் இது என்று பிரதமர் (மோடி) கூறினார். நிச்சயமாக, பெகாசஸ் சாப்ட்வேரின் மேம்பட்ட பதிப்பு ஏதேனும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் கேட்க இது சிறந்த நேரம். என்று பதிவு செய்து இருந்தார். இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சினையை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.