பி.டி.ஆர்.பி தியாகராஜன் Vs தயாநிதி மாறன் – திமுக கும்மாங்குத்து

 

பி.டி.ஆர்.பி தியாகராஜன் Vs தயாநிதி மாறன் – திமுக கும்மாங்குத்து

அதிமுக ஐடி விங்குதான் பெஸ்ட். திமுக ஐடி விங் ஒஸ்ட் என்று தயாநிதிமாறன் ஸ்டாலினிடம் போட்டுக்கொடுக்க, பதிலுக்கு தயாநிதிமாறனை பற்றி போட்டுக்கொடுக்க ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறாராம் திமுக ஐடி விங் தலைவர். இதனால் கட்சிக்குள் மிகப்பெரிய பூசல் வெடிக்கும் என்பதை உணர்ந்த ஸ்டாலின் ஐடி விங் தலைவரை சந்திப்பதை தள்ளிப்போட்டுகொண்டே இருக்கிறாராம்.

பி.டி.ஆர்.பி தியாகராஜன் Vs தயாநிதி மாறன் – திமுக கும்மாங்குத்து


திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கீழ்மட்டம் தொடங்கி மேல்மட்டம் வரை பரவிவரும் இந்த கும்மாங்குத்து மோதலைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்சித் தலைவர் ஸ்டாலின் திணறி வருவதை மூத்த நிர்வாகிகள் வேதனையுடன் கவனித்து வருகின்றனர்.
காணொளி மூலம் அண்மையில் ஸ்டாலின் நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய தயாநிதி மாறன், திமுக ஐடி விங்கின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.

பி.டி.ஆர்.பி தியாகராஜன் Vs தயாநிதி மாறன் – திமுக கும்மாங்குத்து


‘’ அதிமுகவில் ஐடி விங் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் அந்த சூழ்நிலை திமுகவில் இல்லை. திமுக ஐடி விங் மிக மெத்தனமாக செயல்படுகிறது’’ என்கிற தயாநிதி மாறனின் குற்றச்சாட்டை ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் கட்சியின் ஐடி விங் செயல்பாடுகளை அவர் பாராட்டவுமில்லை.
தகவலறிந்து திமுக ஐடி விங்கின் பொறுப்பாளர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.

பி.டி.ஆர்.பி தியாகராஜன் Vs தயாநிதி மாறன் – திமுக கும்மாங்குத்து


மிகப் பாரம்பரியமான பி.டி ராஜன் குடும்பத்தைச் சேர்ந்த தியாகராஜன், தனது தந்தை பழனிவேல்ராஜன் மரணத்திற்கு பிறகு அமெரிக்காவில் மிக நல்ல நிலையில் செட்டிலாகியிருந்தார். மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், கருணாநிதி விரும்பி அழைத்ததன் பேரிலேயே அரசியலில் இறங்கினார். எனினும் தனது சுய கௌரவத்திற்குக் கொஞ்சமும் இழுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் அவர் எளிதில் வளைந்து கொடுப்பவரும் அல்ல.
இத்தகைய பின்னணி கொண்ட தியாகராஜன், தயாநிதியின் தடாலடி குற்றச்சாட்டால் கொதிநிலைக்குப் போய்விட்டாராம்.
‘’ மற்ற கட்சிகளோட ஐடி விங்குகளுக்கு நிதியாதாரம் உட்பட அனைத்து வசதிகளும் குறைவின்றி செய்து தரப்படுகின்றன. ஆனால் திமுகவில் வெறுமனே பேச்சு மட்டும்தான். ஆனால் ஆளாளுக்கு அதிகாரம் செய்ய நினைக்கிறார்கள். இந்த தாயாநிதி குடும்பத்தின் கையில் எவ்வளவு பெரிய மீடியா குரூப் இருக்கிறது! அதை கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்களா? இல்லையே… அதைச் செய்யாதவர்கள் அடுத்தவர்கள் மீது எப்படி குற்றம் சாட்டலாம்? நான் இதை லேசாக விடப் போவதில்லை’’ என நெருக்கமான வட்டாரங்களில் சீறிக்கொண்டிருப்பதாக தகவல்.
இது தொடர்பாக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதார ஆவணங்களுடன் விளக்கமளிக்கவும் தியாகராஜன் முயன்று கொண்டிருக்கிறாராம்.
இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின், அவர் நேரில் வந்தால் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தியாகராஜன் சந்திப்பிற்கு அனுமதி கொடுப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறாராம்.