விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

தவெக தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை பனையூரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், தவெக சார்பில் 120 மாவட்டமாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் உட்பட பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 மாவட்ட பொறுப்பாளர்களை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவர்களை நேர்காணல் செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பொறுப்புகள் கிடைக்காத பலரும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான அதிருப்தியை வீடியோ வாயிலாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் விஜய்- அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெறுகிறது. பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் தேர்தல் வியூகம் தொடர்பாக பேசி முடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.