திமுகவின் B டீம் ஓ.பி.எஸ் - அன்பழகன்
வரும் 23ம் தேதி 1 மணிக்கு மேல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர், நாளை மறுதினம் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை, முன்னாள் முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அந்த பதவியை வகிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டு உள்ளோம் என்றார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் முதலமைச்சரை சந்தித்து திமுகவின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும் திமுகவின் B டீம் ஓ.பி.எஸ் என்றும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார். நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்வது ஓ.பி.எஸ்-யின் விருப்பம் எனவும், வரும் 23ம் தேதி 1 மணிக்கு மேல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்