எடப்பாடி பழனிசாமியை பிசாசு கேபி முனுசாமி அழிக்க பார்க்கிறார்- புகழேந்தி

 
kp munusamy

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

Jayalalitha death case admk pugazhendhi going to appear arumugasamy  commission today/ ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி  இன்று ஆஜர் – News18 Tamil

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது, ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் உடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை தவறாக வழிநடத்தி செல்கின்றனர். அதிமுக கட்சியின் அழிவு, மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் பிசாசு கேபி முனுசாமி தான், அரசியல் பச்சோந்தி கே. பி. முனுசாமி. எடப்பாடி பழனிச்சாமியை அரசியல் ரீதியாக முடிவு கட்டும் வேலையை செய்து வருகிறார் கே .பி.முனுசாமி. 

தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தற்காலிகம் என்று கூறி தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தான், இரட்டை இலை முடங்கினாலும், கட்சியே போனாலும் பரவாயில்லை சுயேட்சையாக நின்று எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளார், நான்காம் தேர்வாளராக ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவை மீட்டெடுத்து வழி நடத்துவார்” எனக் கூறினார்.


..