மோடி குறித்து சர்ச்சை பேச்சு.. நாய் குரைத்தால் பதிலுக்கு குரைப்பதை தவிர வேறு வழியில்லை.. நானா படோலை தாக்கிய பா.ஜ.க.

 
மோடி

மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நானா படோலை, நாய் குரைத்தால் பதிலுக்கு குரைப்பதை தவிர வேறு வழியில்லை என்று புனே பா.ஜ.க. தலைவர்  தெரிவித்தார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கிராமவாசிகள் குழுவிடம் நானா படோல் பேசுவதை காணலாம். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அரசியல்வாதியாக யாருக்கும் ஆதரவாக இருந்ததில்லை. என்னிடம் வந்த அனைவருக்கும் உதவி செய்தேன். அதனால்தான் மோடியை அடிக்கவும், திட்டவும் என்னால் முடியும் என்று பேசியுள்ளார்.

நானா படோல்

மோடியை அடிக்கவும், திட்டவும் என்னால் முடியும் என்று நானா படோலின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புனே பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் முலிக் தனது டிவிட்டர் பக்கத்தில், நானா படோல் ஒரு தெருநாய். குரைக்கும் நாயை புறக்கணிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். ஆனால் நாய் குரைத்தால் பதிலுக்கு குரைப்பதை தவிர வேறு வழியில்லை. நானா உங்களுக்கு ஆர்வலர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

ஜெகதீஷ் முலிக்

மேலும், பிரதமர் பதவிக்கான மரியாதை குறித்து காங்கிரஸ் கட்சி மற்றும் நானா படோலை பல பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேசமயம், நான் பிரதமர் மோடியை கூறவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனது குடும்ப பெயரை பகிர்ந்து கொள்ளும் உள்ளூர் ரவுடிகளை குறிப்பிட்டதாக நானா படோல் விளக்கம் கொடுத்தார்.