பஞ்சாப் அரசு சொல்லித்தான் பிரதமரின் வாகனத்தை மறித்தார்கள் - ஹரியானா முதல்வர் பரபரப்பு

 
k

பஞ்சாப் மாநில அரசு சொன்னதன் பேரில் தான் விவசாயிகள் பிரதமரின் வாகனத்தை மறித்ததாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் குற்றம் சாட்டியிருக்கிறார்.  

s

 கடந்த 5ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் விமான நிலையத்திற்கு சென்றார்.  அங்கே வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் காரில் பயணம் சென்றார்.   நடுவழியில் விவசாயிகள் பிரதமரின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாததால் பிரதமர் திரும்பிச் சென்றார்.

 இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.    இதுகுறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.  பிரதமரின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு வெளிநாட்டு சதி தான் காரணம் என்றும்,  சோனியா காந்தி தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

kh

 இந்த நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.   மோசமான வானிலை காரணமாக மாற்று வழியை திட்டமிட வேண்டியிருக்கும் என்று பஞ்சாப் காவல்துறைக்கு முன்னதாகவே அறிவுறுத்தி இருந்த நிலையில்,  எந்த ஒரு ஏற்பாடுகளையும் செய்யாமல் பஞ்சாப் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது என்றும் ,  பஞ்சாப் அரசின்  அறிவுறுத்தலின் பேரில்தான் விவசாயிகள் பிரதமரின் வாகனத்தை மறித்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 பிரதமரின் உயிருக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்  சன்னி ஆபத்தை விளைவித்தார் என்றும்  அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.