அப்பம் நம் நிலத்தை சீனா ஆக்கிரமித்திருந்தால், மன்மோகன் சிங் பதவியை ராஜினாமா செய்திருப்பார்... மோடியை தாக்கிய ராகுல்

 
அவரு ஒப்புதல் மட்டும்தான் தாங்க கொடுத்தார்! சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்கும் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்திருந்தால், அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பார் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கினார்.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமின் இறுதி நாளான நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ராகுல் காந்தில் அதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்திருந்தால், அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பார். 

ராகுல் காந்தி

ஆனால் இந்திய பகுதிகளை சீனா கைப்பற்றிய பிறகும் பிரதமர் மோடி இன்னும் பதவியில் அமர்ந்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை பரப்புகிறது, அதை அன்புடன் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் கதைகளை எதிர்க்கொள்ளும் நோக்கத்துடன் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், இவர்கள் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.) மத அரசியலில் ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் காட்ட வேறு எதுவும் இல்லை. இந்த நாட்டில் மக்களின் இதங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது என்று தெரிவித்தார்.