மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ராகுல் காந்தி கிண்டல்

 
மோடி

டாவோஸ் மாாட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதமர் மோடியின் தடைப்பட்டதை குறிப்பிட்டு, மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

உலக பொருளாதார கூட்டமைப்பு  ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உச்சிமாநாடு நடத்தி வருகிறது.   இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு, டாவோஸ் செயல் திட்ட மாநாடு என்ற பெயரில்  நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காானாலி காட்சி மூலம் பங்கேற்றார். உச்சிமாநாட்டின்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதமர் மோடியின் உரையில் தடங்கல் ஏற்பட்டது.

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்படரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. டெலிப்ராம்ப்டர், ஆட்டோக்யூ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நபருக்கு பேச்சு அல்லது ஸ்கிரிப்டை படிக்க உதவும் ஒரு காட்சி சாதனமாகும்.  பொதுவாக வீடியோ கேமராவுக்கு கீழே ஸ்கிரிப்ட் திரை வைக்கப்பட்டு இருக்கும், அதை பார்த்து தொகுப்பாளர் படிப்பார்.  இருப்பினும், பிரதமர் பயன்படுத்தும் டெலிப்ராம்ப்டர் சற்று வித்தியாசமானது. 

ராகுல் காந்தி

டாவோஸ் மாநாட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதமர் மோடியின் பேச்சு தடைபட்டதை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அதில் ராகுல் காந்தியும் உண்டு. ராகுல் காந்தி டிவிட்டரில்,  பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பதிவு செய்து இருந்தார்.