ஜெயலலிதாவின் கடைசி ஆசை இதுதான் -அன்று நடந்ததை விவரிக்கும் சசிகலா

 
jayalalitha

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி ஆசை என்னவென்பதை அவருடன் தொடர்ந்து பயணித்த அவரது தோழி சசிகலா கூறியிருக்கிறார்.  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 5 .12. 2016ல்  ஜெயலலிதா உயிரிழந்தார்.  அவர் உயிரிழப்பதற்கு முன்பாக தெரிவித்த கடைசி ஆசையை சசிகலா தற்போது வெளியிட்டிருக்கிறார்.

சென்னை அப்போலோவில் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும்,  அவர் வீட்டுக்குச் செல்லலாம் என்றும் அப்பல்லோ மருத்துவ தலைமை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் , திடீரென்று டிசம்பர் 5ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.  அதனால் ஜெயலிதாவின் மரணத்தில்  மர்மம் இருப்பதாக இன்று வரைக்கும் சர்ச்சை தொடர்கிறது.  இதுகுறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

jaya sasi

இந்நிலையில்,   நமது எம்ஜிஆர் நாளிதழில் ஜெயலலிதாவின் கடைசி நாட்கள் குறித்து சசிகலா,   ‘’ இதய தெய்வம் அம்மா குணமடைந்து வந்ததால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 19.12. 2016 அன்று போயஸ்கார்டன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.  ஆனால்,  நான் நேரடியாக கொடநாடு தான் போவேன் என்று மருத்துவர்களிடம் அம்மா சொன்னார்.  அதற்கு மருத்துவர்கள்,   அங்கு குளிர் அதிகமாக இருக்கும்.  நாங்கள் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவதும் கடினமாக இருக்கும்.  அதனால் எங்களுக்காக ஒரு மாதமாவது சென்னையிலேயே இருங்கள் . அதன்பிறகு கொடநாடு செல்லலாம் என்று அறிவுறுத்தினார்கள்.  அதற்கு அம்மா,  ’ இங்கே நான் தான் பாஸ்’ என்று மருத்துவர்களிடம் கூறினார் என்று அவர் மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.

கொடநாடு கொலை மற்றும் வழக்கின் மறுவிசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்களும் தகவல்களும் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில்,  ஜெயலலிதாவின் கடைசி ஆசையே கொடநாடு செல்லவேண்டும் என்பதுதான் என சசிகலா வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.