கமல்ஹாசனை சந்தித்து அரசியல் பேசிய சவுக்கு சங்கர்
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அரசியல் பேசியுள்ளார் சவுக்கு சங்கர்.
யூடியூபில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மிகவும் பிரபலமானவர் சவுக்கு சங்கர். அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல் தொடர்ந்து சினிமா பிரபலங்களை கூட தாக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மை காலமாக அரசியலில் நடக்கப்போகும் சில விஷயங்களை முன்கூட்டியே ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பிவருகிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு @ikamalhaasan அவர்களை சந்தித்து என் புத்தகத்தை பரிசளித்தேன்.
— Savukku Shankar (@SavukkuOfficial) September 5, 2023
அரசியலும் பேசினோம். pic.twitter.com/YmJelZ8urT
அந்த வகையில் செந்தில்பாலாஜி கைது விஷயத்தில் ரொம்ப ஆர்வமாக இருந்த சவுக்கு, தற்போது கமல் பக்கம் திரும்பியுள்ளார். அண்மையில் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் கார் வழங்கியதை பாராட்டிய சவுக்கு சங்கர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷர்மிளா பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பேச தொடங்கிவிட்டன. ஆனால் கமல்ஹாசன் இதுவரை தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை. இந்த சூழலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சவுக்கு சங்கர் இன்று சந்தித்துள்ளார். இதுகுறித்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து என் புத்தகத்தை பரிசளித்தேன். அரசியலும் பேசினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.