"ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?"- சீமான்

பீகாரில் நின்று ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பண்நெடுங்காலமாக இந்த நாட்டில், கட்சி அரசியல் தேர்தல் அரசியலையே செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்கள் அரசியலை பேசி முன்னெடுக்கவே இல்லை.. தேர்தல் வியூக வகுப்பாளர்கள், கொண்டு தேர்தலை வெல்வது மட்டுமே உங்களுடைய நோக்கமாக, வியாபாரமாக மாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது ஒரு தேர்தல் அரசியல் மட்டும் தான், மக்கள் அரசியல் எப்பொழுது தான் செய்யப் போகிறீர்கள்..? மக்கள் பிரச்சனைக்கான போராட்டங்கள், தீர்வுகள் என எதையுமே முன்னெடுப்பது இல்லை. மக்கள் அரசியல் தான் இங்கு தேவை.
என் தம்பி விஜயை எடுத்துக் கொள்ளலாம், ஜான் ஆரோக்கியசாமி என்ற தேர்தல் வகுப்பாளர் இருக்கிறார். அதன் பிறகு ஆதவ் அர்ஜூனா என்ற வியூக வகுப்பாளர் இருக்கிறார். இவர்களுக்கெல்லாம் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இங்கு நடக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியும். ஆனால் பீகாரில் இருந்து ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் வருகிறார் என்றால், உங்களுக்கெல்லாம் மூளை, அறிவு என்று ஏதாவது இருக்கிறதா?, திருப்பரங்குன்றத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது அல்லவா... அது பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? அத்திக்கடவு-அவிநாசி என்றால் தெரியுமா?, நொய்யல் ஆறு பிரச்சினை பற்றி தெரியுமா,? கருணாநிதி அம்மையார். ஜெயலலிதா வரை இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே? அதிமுக, திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா? இதே பிரசாந்த் கிஷோர் பீகாரில் நின்று strategy போட்டு ஜெயிக்கவில்லையே? ஒருதொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? ரூ.300 கோடி காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். பீகாரில் இருந்து வரும் ஒருத்தனுக்கு அறிவு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பவனுக்கு இல்லையா? உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்... எனக்கு கொஞ்சம் காசு கொடு இந்தியாவிற்கே strategy செய்து கொடுக்கிறேன்... ஏன் அகில உலகத்திற்கே செய்து கொடுக்கிறேன்?” என்று கூறினார்.