சீமான்.. சீமான்னு வெறி புடிச்ச நாய் மாதிரி கத்த தெரியுதுல்ல.. விசிக -நாதக மோதல்

 
ட்ச்

புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோவை வெளியிட்டு ஏன் இன்னும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கேட்டதும் உடனே சீமான் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.  இதனால் நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்து  வருகின்றார்கள்.

வ

வேங்கைவயலில் குற்றவாளியைக் கண்டறிந்து வழக்குப் பதிவுசெய்யத் துப்பற்ற திமுக, பீகாரி பார்ப்பனன் சொன்னதும் உடனடியாக முந்திக்கொண்டு அண்ணன் சீமான் மீது வழக்கைப் பாய்ச்சுகிறது.  வடவர் ஆதிக்கத்தை எதிர்த்தால் வழக்கா? வடவர் நம்மவரும் இல்லை; நல்லவரும் இல்லை எனக் கூறியது எந்தக் கட்சி? என்று கேட்கிறார் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்.

இதற்கு விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னி அரசு,  வேங்கைவயல் மலம் கலந்த சாதியவாதிகளை கைது செய்ய வக்கில்லாத காவல்துறை,போராடிய தவாக தோழர்களுக்கு எதிராக சாதிவெறிக்கும்பலை தூண்டிவிட்டுள்ளது. போராடுவோருக்கு ஆதரவாக நிற்கும் ஆதிதிராவிட மக்களிடம் போலீசார் அச்சுறுத்துவதை காணலாம். போலீசாரா? சாதிவெறிக்கும்பலின் பாதுகாவலர்களா?  கேவலம் என்று விமர்சித்திருக்கிறார்.

i

வன்னி அரசுவின்  இந்த பதிவுக்கு, மத்த நேரத்துல எல்லாம் சீமான்.. சீமான்னு வெறி புடிச்ச நாய் மாதிரி கத்த தெரியுதுல்ல.. சாதி வெறிக் கும்பலின் பாதுகாவலரா திமுக அரசு செயல்படுது. ஸ்டாலின் சாதிவெறிக் கும்பலாக காவல்துறையை வைத்திருக்கிறார்னு துணிவு இருந்தா வாய்திறந்து சொல்லு வன்னி! அதுக்குத் துப்பு இல்லைல! என்று ஆவேசமாகிறார் இடும்பாவனம் கார்த்திக்.

சாதிவெறியர்களைக் கைதுசெய்யத் துப்புகெட்ட திமுக அரசை நேரடியாகக் கேள்வி கேக்க வக்கு இருக்கா வன்னி? காவல்துறை என்ன உத்திரப்பிரதேச அரசின் கட்டுப்பாட்டுலயா இருக்கு? வேங்கை வயலுக்கே நேரில் சென்று வந்துவிட்டார் அண்ணன் சீமான். ஸ்டாலினோ, உதயநிதியோ ஏன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கல? என்று இடும்பாவனம் கார்த்திக் கேட்க,   உடனே வன்னி அரசு,   தம்பி மலத்தை கலந்த சாதி வெறியர்களை கண்டித்து ஒரு போராட்டம் நடத்த  ஓம்தமிழர் கட்சிக்கு வக்கு இருக்கிறதா?சாதி வெறியர்களுக்கு அஞ்சி பதுங்குகிறாரா? அட்டகத்தி சீமான் என்று கேட்கிறார் வன்னி அரசு.