"தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா?" - செல்லூர் ராஜூவின் "நச்" பதில்!

 
செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவா பாஜகவா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக நிலவி  வருகிறது. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எவருமே டிவி விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால் பாஜக ஆதரவாளர்களோ வரிந்துகட்டி விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதேபோல அவர்களின் தலைவர்களும் எதையாவது ஒன்றை சொல்லி திமுக அமைச்சர்களை வம்புக்கிழுக்கின்றனர். ஆனால் மறுபுறம் அதிமுக தலைவர்களோ சசிகலாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிக்கான அறிகுறி சிறிதளவு கூட அதிமுகவிடம் தெரியவில்லை.

பெற்ற தாயும் இல்லை, வளர்த்த தாயும் இல்லை” - பிரசாரத்தில் உருகும் செல்லூர்  ராஜூ| Sellur raju election campaign in madurai

முன்னமே சொன்னதுபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வம்பிழுத்து வருகிறார். மின்சார துறையில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆதாரத்தை வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. இவர் மட்டுமில்லாமல் காயத்ரி ரகுராம், ஹெச்.ராஜா போன்றவர்களும் தங்கள் பங்கிற்கு எதையாவது ஒன்றை சொல்கிறார்கள். அரசை குற்றஞ்சாட்டுகிறார்கள். எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் பெயரளவுக்கு மட்டுமே அறிக்கை வெளியிடுகிறார்கள். தங்களது இருப்பை காட்டிக் கொள்கிறார்கள் போல. 

தமிழ்நாடு பாஜக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் அண்ணாமலை! | nakkheeran

மேற்கூறிய சம்பவங்களை முன்வைத்து திமுகவின் ஊழலுக்கு எதிராக தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கட்சி போல் செயல்படுவதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக அண்ணாமலை அப்படி சொல்லியிருப்பார். திமுக 6 மாத காலம் எவ்வாறு ஆட்சி செய்கிறது என்பதை பார்த்து எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்கியுள்ளோம். அதிமுக அமைதி காக்கவில்லை. மக்களின் எதிர்பார்ப்பை திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை என்றால், அதிமுக வலுவான போராட்டத்தை நடத்தும்” என்றார்.