ஸ்டாலின், இபிஎஸ் மீது கேசிபி எழுப்பும் சந்தேகம்

 
s

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின் அப்போதைய அதிமுக ஆட்சி மீதும் அதிமுக அமைச்சர்களின் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.   ஆளுநரிடம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊழல் புகார் பட்டியலை கொடுத்து வந்தார்.

e

 தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட ஆட்சிக்கு வந்ததும் அதிமுக மீதும் அதிமுக அமைச்சர்கள் மீதும் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார் ஸ்டாலின்.  ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கையில் எடுத்து அதில் தீவிரம் காட்டாததால் மறைமுக ஒப்பந்தம் எதுவும் செய்து கொண்டீர்களா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் முன்னால் அதிமுக எம்பி கே. சி. பழனிச்சாமி.

 அதே போல் ஆட்சியில் இருந்தபோது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்காமல் இப்போது திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது குறித்தும் கேள்வி எழுப்பு இருக்கிறார் கே. சி. பழனிச்சாமி.

t

 இதுகுறித்து அவர்,  சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக ஆட்சியில்  லஞ்சம், ஊழல்  புகார்களை அடுக்கிய ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக ஆளுநரிடம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   முதலமைச்சரான பிறகு, அது குறித்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்காது ஏன் ?  மெட்ரோ ரயில் திட்டத்தில் ஊழல் உள்ளதாக தற்போது திமுக மீது குற்றச்சாட்டு வைக்கும் இபிஎஸ், முதலமைச்சராக இருந்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?  எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.