ரெண்டு வருஷத்துல போட்டு என்ன புடுங்க போறாரு.. வைரலாகும் வீடியோ

 
v

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்காக சென்னை மெரினா கடலில் பேனா சிலை அமைக்கிறது திமுக அரசு.  இதற்கு நாம் தமிழர் கட்சி உட்பட அதிமுக கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன் என்று ஆவேசப்பட்டு சொல்லி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ப்

 கடலில் பேனா சிலை வைத்தால் இது மெரினா கடல் என்ற பெயர் போயி பேனா கடல் என்ற பெயர் வந்துவிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்திருக்கிறார் .

பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் கூட மெரினா கடலில் பேனா சிலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது திமுக அரசு.   இது குறித்து இளம்பெண் ஒருவர் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.  அந்த வீடியோ வைரலாகி வருகிறது .  அந்த வீடியோவை அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

 அந்த வீடியோவை வெளியிட்டு,   ‘’சூடு சொரணை இருக்கிறவங்களுக்கு இத பாத்தா ரோஷம் வருமா?  இல்லைனா கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடுங்க உ.பிஸ்.. ’’என்றும் பதிவிட்டு இருக்கிறார்.  


 அந்த வீடியோவில் அந்த இளம் பெண்,  ‘’எதுக்கு.. எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை.  மெரினாவில் பேனா சிலை வைக்கிறது இப்ப அவசியமா? யாரு கேட்டா பேனா சிலை? அவங்க அப்பாவுக்காக அவர் சிலை வைக்கிறார்.  இந்த மக்களுக்காக அவர் என்ன வைத்தார்?  ஒண்ணுமே வைக்கலையே!  ஆயிரம் ரூபாய் போடுகிறேன் என்று சொன்னார் . என்ன ஆச்சு இன்னமும் போட காணோம்.  அவர் வந்து அஞ்சு வருஷத்துல ரெண்டு வருஷம் ஓடிப்போச்சு . மூணு வருஷத்துல மூணாவது வருஷமும் ஓடிடும்.  ரெண்டு வருஷத்துல போட்டு என்ன புடுங்க போறாரு.. நான் கேட்கிறேன்..என்ன பன்னப்போறாரு..’’ இவ்வாறு தனது எண்ணத்தை, மனக்குமுறலை  வெளிப்படுத்தி இருக்கிறார்.