நீ எவன் எவனையோ அப்பான்னு சொல்ற- நீ யார கடிக்கல;யார குதறல?சீமான் மீது செல்வபெருந்தகை கடும் தாக்கு

 
ss

ங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்கள் ராஜீவ்காந்தி பிள்ளைகள் போல பேசுகிறார்கள் .  சக்களத்தி சோனியா பிள்ளைகள் போல பேசுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அன்மையில் பேசியிருந்தார்.   இதைத்தொடர்ந்து அவரது கட்சியின் சாட்டை முருகன்,    நீங்கள் கருணாநிதி அண்ணாதுரையிடம் படித்து வளர்ந்தவர்கள்.   நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வளர்ந்த பிள்ளைகள்.   பெரியார், கருணாநிதி பிள்ளைகளுக்கு பேச தெரியும், எழுத தெரியும்.   பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும் .   ராகுல் காந்திக்கு தெரியும்.  சோனியா காந்திக்கு தெரியும்.  உங்களுக்கு தெரியுமில்ல.. ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குல்ல.. அவ்வளவுதான்.. என்று எச்சரித்து பேசியிருந்தார்.

 இதையடுத்து காங்கிரஸார் புகாரின்பேரில் சாட்டை துரைமுருகன் கடந்த 11ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.  சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.   காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மற்றும் ஜோதிமணி எம்பி ஆகியோர் டிஜிபியை சந்தித்து புகார் அளித்தனர். 

sp

 இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை,    ‘’தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சீமான் காங்கிரசையும் காங்கிரஸ் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி பேசுவதையும் கிண்டலடிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.  அவருக்கு இதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது என்று தெரியவில்லை.  வாங்குற கூலிக்கு இதைவிட யாரும் சிறப்பாக வேலை செய்துவிடமுடியாது.  இந்த உலகத்திலேயே மிகப்பெரிய துரோகம் பச்சை துரோகம் திருப்பெரும்புதூரில் நடந்தது.  அதை அடிக்கடி டச் செய்கிறார்.  திருப்பெதும்புதூரில் என்ன நடந்தது தெரியுமா என்கிறார். என்ன நடந்தது..பச்சைத்துரோகம் நடந்தது.  வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற பெயர் 1991 வரைக்கும் இருந்தது.  அதற்கு பிறகு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது’’என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,   ‘’சீமான்கிட்ட நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன்..நீ யார கடிக்கல..யாரை குதறல..ஒரு விளிம்பு நிலை சமூகத்தில் இருந்து வரும் ரஞ்சித்தை கடிச்சு குதறுவார்.  ஒரு பொதுவுடமை இயக்கத்தில் பேராசிரியர் அருணன்  வந்தா அவரகடிச்சு குதறு..நீ யார விட்டு வைக்கிற? தமிழருவி மணியன கடிச்சு குதறுற..உன்னத்தவிர யாரும் இருக்க கூடாதா நாட்டுல..நீ ஹிட்லரா? முசோலினியா? மைக் முன்னால கத்தி கத்தி ஜுரம் வந்து படுத்திருக்காங்க.   இதுதான் தமிழகத்தோட நிலைமை.  

sn

காங்கிரஸ் பேரியக்கத்தை,  அம்பேத்கர் ஏற்றுக்கொண்ட தலைவி இந்திராகாந்தியின் குடும்பத்தை பற்றி நக்கல் அடிச்சா நேரா புறப்பட்டு உன் வீட்டுக்குவருவோம்.  உன் வீட்டுக்கு வந்து நிற்போம். இதுதான் உன் உனக்கு முதலும் கடையுமான எச்சரிக்கை.

ஒரு வரம்பு இருக்கு பேசுறதுக்கு.  என்னய்யா அரசியல் பண்ற நீ..நீ என்ன அரசியல் பண்ற? நாங்க கூட ஆர்.எஸ்.எஸ்.ஐ கடுமையா எதிர்ப்போம்.  கொள்கை ரீதியாக பிடிக்காது.  ஆனா, கொச்சைப்படுத்தி பேசமாட்டோம்.  பிஜேபியை நாட்டுல அனுமதிக்க கூடாது என்று பேசுவோம். ஆனா, கொச்சைப்படுத்தி பேசமாட்டோம்.  

நாங்க நாகரீகமாக சொல்றோம்.  மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக சொல்றோம்.  ஆனா, நீ சாட்டை முருகன்னு கொண்டாந்து நிறுத்திட்டு,  திருப்பெரும்புதூர் தெரியுமா?ன்னு கேட்டா,  அது ராமானுஜர் பிறந்த ஊர்.  அந்த மண்ணை ரத்த கரையாக்கி தலைகுனிய வைத்த பாதகர்களை பற்றி நீ பேசிக்கிட்டு இருக்குற...என்ன திருப்பெரும்புதூர்..நான் தான் அங்க சட்டமன்ற உறுப்பினரா இருக்கேன். வா பார்ப்போம். மோதுறதா இருந்தா நேருல வந்து பேசு.  இறந்து போன தலைவர்களை பற்றி கொச்சைப்படுத்தாதே.  

se

ஒரு அளவு இருக்கு.  இந்திராகாந்தி குடும்பத்தை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு.  நீ எவன் எவனையோ அப்பான்னு சொல்ற..யார் யாரிடமோ உறவு கொண்டாடுற..மணல் மாபியாகிட்ட பணம் வாங்குறேன்னு சொல்லுறாங்க.  இதுமாதிரி காங்கிரஸ்காரங்க ஈனப்பொழப்பு பொழச்சிக்கிட்டு இருக்காங்களா?

பெரியாரும் அண்ணாவும் என்ன சொன்னாங்க? வெளிநாட்டுல போய் பிச்சை எடுக்க சொன்னாங்களா? கடல் கடந்து போய் தீவிரவாதிகளை ஆதரிக்க சொன்னாங்களா? பெரியாரும் அண்ணாவும் நல்வழி சொல்லி கொடுத்தாங்க.  பிரபாகரன் என்ன சொல்லி கொடுத்தார்? இந்த மண்ணுல எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள். பகத்சிங் வாரிசுகள் நாங்க இருக்கிறோம்.  நம்ம மண்ணுல இல்லாத தலைவர்களா? எங்களுக்கு எதுக்கு வெளிநாட்டுல இருக்குற தலைவன்?’’என்று கேட்டுவிட்டு,    இதுதான் முதலும் கடைசியுமான எச்சரிக்கை.   அப்புறம் வேறு பல விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கிறேன்’’என்றார்.