’’அந்த 300 கோடியை முதல்வர் ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும்! ஏன் தெரியுமா?’’

 
c

 தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆண்டுக்கு ரூ.1,360 கோடியை ஒன்றிய அரசு தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான (2020-21) ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியில் ரூ.300 கோடி நிலுவையில் உள்ளது  என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

a

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘’மாண்புமிகு அமைச்சர் அவர்களே!  தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதியை பற்றி முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்! இது 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் கொடுக்கின்ற நிதி! 2020-21 ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதி-1,360 கோடி! இதில் மத்திய அரசு தனது பங்கான 1020 கோடியை ஜூலை 31 ஆம் தேதி அளித்துவிட்டது! நம்முடைய மாநில அரசு கொடுக்காத 300 கோடியை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உடனடியாக நம்முடைய முதலமைச்சரிடம்  முறையிட்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்று தெரிவித்திருந்தார்.

sd

மேலும், ‘’உங்களுடைய புரிதலுக்காக சில குறிப்புகள் இணைத்துள்ளேன்!’’என்று அவர் தெரிவித்திருந்தார்.

sdd

இதையடுத்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண திருப்பதி,  ‘’உண்மையில் இது குறித்து இவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. பேரிடர் நிவாரண நிதி என்பது பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைகளை தீர்க்கவே என்பதும், பாதிப்புகளுக்கான நிதி, துறை சார்ந்த நிதியிலிருந்து வழங்கப்படும் என்று கூறியும் உணராது இருக்கிறார்கள். தமிழக ஊடகங்களும் அதற்கு துணை போகின்றன’’என்கிறார்.