என்னாச்சு? என்னாச்சு? அடுத்த போஸ்டர் மோதலை தொடங்கிய பாஜக

 
bj

 திமுக - பாஜக கட்சியினரின் போஸ்டர் மோதல் கன்னியாகுமரியில் தொடர்கின்றதால் அம்மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

 கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக பணம் வழங்கப்பட்ட போது அந்த தொகை போதாது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.   திமுகவினர் பலரும் அதே கோரிக்கையை எழுப்பி வந்தனர். 

 இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து பொங்கல் பரிசு பணம் எதுவும் வழங்கவில்லை.   வழங்கப்பட்ட பொங்கல் பொருட்களும் தரமானதாக இல்லை என்று பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்து வருகின்றன.  

bjp

 இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரூ. 5000 எங்கே? என்று கேட்டு பாஜகவினர் கன்னியாகுமரி முழுவதும் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.   இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் 15 லட்சம் ரூபாய் எங்கே? என்று போஸ்டர்களை கன்னியாகுமரி முழுவதும் ஒட்டினர். 

 பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது .  இதை செய்யாததால் திமுகவினர் பதிலடி கொடுத்திருந்தனர்.   இந்த போஸ்டர் மோதலால் கன்னியாகுமரி மாவட்டம் பரபரப்பானது.

 இந்த நிலையில் மீண்டும் பாஜக அடுத்த போஸ்டர் மோதலை தொடங்கியிருக்கிறது.   அதில்,   அறிவாலய அரசே பதில் சொல்... கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்னாச்சு?   மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என்னாச்சு? மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி என்னாச்சு? இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்னாச்சு? என்ற கேள்விகளை கேட்டு அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

 குமரி மாவட்டத்தில் மீண்டும் பாஜக -திமுக இடையே போஸ்டர் மோதல் எழுந்துள்ளதால் ,  தொடரும் இந்த போஸ்டர் மோதலால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.