கோழைகளால் போரில் போராட முடியாது.. பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.பி.என். சிங்கை தாக்கிய காங்கிரஸ்

 
காங்கிரஸ்

கோழைகளால் போரில் போராட முடியாது என்று காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.பி.என். சிங்கை காங்கிரஸ் தாக்கியுள்ளது.

ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆர்.பி.என். சிங் நேற்று அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் விலகினார். அடுத்த மாதம் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆர்.பி.என். சிங் பா.ஜ.க.வில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.பி.என். சிங்கை கோழை என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

ஆர்.பி.என். சிங், ஜே.பி.நட்டா

ஆர்.பி.என். சிங் பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது: நாடு முழுவதும், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் நடத்தும் போர், அரசு வளங்கள், அதன் ஏஜென்சிகளுக்கு எதிரான போர். இது சித்தாந்தம், உண்மை ஆகியவற்றின் போர் மற்றும் வலுவான சுருதியுடன் போராட நீங்கள் தைரியத்துடனும், மிகுந்த அர்ப்பணிப்புடனும் போராட வேண்டும். இந்த போராட்டம் கோழைகளுக்கானது என்று நான் நினைக்கவில்லை.  பிரியங்கா காந்தி கூறியது போல், இந்த போரை நடத்த உங்களுக்கு தைரியம் வேண்டும், நீங்கள் ஒரு கோழையாக இருந்தால் இந்த போரில் போராட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுப்ரியா ஷ்ரினேட்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆர்.பி.என். சிங் ராஜினாமா செய்தது தவறு என்று கட்சி கருதுகிறது. நாங்கள் காங்கிரஸின் உண்மையான வீரர்கள், நாங்கள் இங்கேயே வாழ்ந்து இறப்போம். அவருடைய முடிவு தவறானது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று தெரிவித்தார்.