பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு ஓடியவருக்கு ர.ர.க்கள் கொடுத்த பரிசு

 
t

 அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக இருந்தவர் அன்வர்ராஜா.  முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்பியுமான இவர் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால்,  கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,  கழக கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து தலைமை முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்- இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று அறிவித்தனர்.

 சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா நீக்கப்பட்டதால் சிறுபான்மையினர் இனத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ,  அதனால்தான் அதிமுவின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று செயற்குழுவில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

w

 அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் அண்மையில் காலமானார்.  அதன் பின்னர் அவர்  வகித்து வந்த அப் பதவி காலியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று நடந்த செயற்குழுவில் தமிழ்மகன் உசேனுக்கு  தற்காலிக அவைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வருகிறார்.

 தமிழ்மகன் உசேன் திமுகவில் இருந்தபோது அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தமிழ்மகன் உசேன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.   ஆரம்ப காலங்களில் பேருந்து ஓட்டுநராக இருந்திருக்கிறார்.   1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவலை சக பயணிகள் மூலமாக தெரிய வர,  உடனே பேருந்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்.

mg

 சென்னைக்கு வந்த அவர் திமுகவுக்கு எதிராக புதிய கட்சி அமைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் இரத்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். அதன்பின்னர் அதிமுக தொடங்கப்பட்டது.    கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக முதன்முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.   2011ஆம் ஆண்டு தான் அகில உலக  எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.   2012ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும்,  வக்பு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

 தற்போது அன்வர்ராஜா வெளியே சென்றுவிட்டதால் தமிழ்மகன் உசேன் உள்ளே வந்திருக்கிறார்.    அதிலும் முக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறார்.   தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்க செய்ததில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியினர்.