அத்தனை ஆவேசப்பட்டும் அசராத அதிகாரிகள்! அமைச்சருக்கு மீண்டும் அதே தலைவலி!
ஒழுங்கா மரியாதையா தகுதியானவர்களை மட்டும் லிஸ்டில் சேர்த்து புது பட்டியல் எடுத்துட்டு வாங்க என்று அமைச்சர் துரைமுருகன் எச்சரித்தும் கூட, அத்தனை ஆவேசப்பட்டும் கூட தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்காமல் ஏற்கனவே லிஸ்டில் இருப்பவர்களையே வரிசை எண்ணை மட்டும் அங்கே இங்கே என்று மாற்றி இதுதான் புது லிஸ்ட் என்று அமைச்சரிடம் நீட்டி இருக்கிறார்கள். எச்சரித்ததால் புது லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் என்று நம்பிய அமைச்சருக்கு இப்போது மீண்டும் தலைவலி வரப்போகிறது என்கிறார்கள்.
தமிழக நீர்வளத்துறையில் 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்ற ஊழியர்கள் தங்களை நிரந்தர பணி வழங்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்று ணியை நிரந்தரம் செய்ய தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது .
நீர்வளத் துறையில் மொத்தம் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த மூவாயிரம் பேரில் 1400 பேர் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு பத்தாண்டுகள் பணி முடித்தவர்கள். இதனால் ஒப்பந்த பணியாளர்களின் பணி நிரந்தரம் குறித்த லிஸ்ட் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் . அதாவது 10 ஆண்டுகள் பணி முடித்த அதிகாரிகளின் லிஸ்ட் கேட்டு இருக்கிறார். ஆனால் 3000 பேரில் 1400 பேரை மட்டுமே கொண்ட லிஸ்ட் தயாரிக்க வேண்டியிருந்ததால் 10 ஆண்டுகள் பணி முடித்த சீனியர்கள் பலரின் பெயர்களை விட்டுவிட்டு தங்களுக்கு வேண்டிய ஜூனியர்கள் பலரின் பெயர்களை லிஸ்டில் சேர்த்து அமைச்சரிடம் கொடுத்திருக்கிறார்கள்.
அமைச்சரும் அதை நம்பி வாங்கி இருக்கிறார். ஆனால் இதை அறிந்த சீனியர்கள், அமைச்சரிடம் சென்று புலம்ப , ஆவேசமான அமைச்சர் துரைமுருகன், அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க பார்க்கிறீர்களா? ஒழுங்கா மரியாதையா தகுதியானவங்களை மட்டும் லிஸ்டில் சேர்த்து புது லிஸ்ட் எடுத்துட்டு வாங்க என்று ஆவேசப்பட்டு கூறி இருக்கிறார்.
அமைச்சர் அத்தனை ஆவேசப்பட்டும் கூட கொஞ்சம் கூட அசராத சில அதிகாரிகள் , ஜூனியர்களை எடுத்து விட்டு சீனியர்களை லிஸ்டில் சேர்க்காமல் வரிசை எண்ணை மட்டும் அங்கே இங்கே என்று மாற்றி, இதுதான் புது லிஸ்ட் என்று அமைச்சரிடம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேலும் தப்பு நடக்க வாய்ப்பு இல்லை. நாம திட்டியதால் ஒழுங்கான லிஸ்ட் கொடுத்து இருக்கிறார்கள் என்று நம்பி டிக் செய்து இருக்கிறாராம் அமைச்சர்.
இந்த விஷயம் சீனியர்களுக்கு தெரியவர, மீண்டும் அமைச்சரிடம் சென்று புலம்ப ஆயத்தமாகி வருகிறார்களாம்.