பொறுத்தது போதும் .. தினகரன் எடுத்த திடீர் முடிவு

 
ட்ட்வ்

அமமுகவை தொடங்கி நான்காண்டுகள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.   ஆனாலும் இன்னமும் கட்சிக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்படாமல் இருக்கிறது.   எப்படியாவது அதிமுகவுடன் அமமுகவை இணைத்துவிட வேண்டும் என்கிற சசிகலாவின் முயற்சியினால் தான் கட்சியின் உறுப்பினர் அட்டையை இதுவரை யாருக்கும் வழங்கப்படாமல் இருக்கின்றது என்கிறார்கள் அமமுகவினர்.

 இந்த காரணத்தை சொல்லித்தான் அமமுகவின் பல நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.   கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் உறுப்பினர் அட்டை கூட இல்லை.  அப்படி இருக்கும்போது இந்த கட்சியை நம்பி எப்படி இருப்பது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பல நிர்வாகிகள் வெளியேறினர் .

ச

அதிமுகவுடன் அமமுகவை  சசிகலா இணைத்து விடுவார் என்று டிடிவி தினகரனும் பொறுத்திருந்து பார்த்தார். ஆனால் இன்றைக்கு வரைக்கும் எடப்பாடி பழனிச்சாமி விடமிருந்தும்,   ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்தும் எந்தவித அழைப்புகளும் இல்லை என்பதால் பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் டிடிவி தினகரன்.

அமமுக  உறுப்பினர் அட்டையை வழங்க அவர் முடிவு எடுத்து உறுப்பினர் அட்டையை அச்சடிக்க உத்தரவிட்டு இருக்கிறாராம்.   உறுப்பினர் அட்டை வேண்டும் என்று மண்டல செயலாளர்கள் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும்,   உறுப்பினர் அட்டை மூலம் சசிகலாவுக்கு எதிராக திரும்புவதால் பாதிப்புகள் ஏற்படுமா? கட்சியை தொடர்ந்து நடத்த முடியுமோ? என்றும்  சில மண்டல செயலாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றார்களாம்.

அம்ம்க்

 இது குறித்தெல்லாம் ஆலோசிப்பதற்காக தான் இன்றைக்கு அமமுகவின் மண்டல செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.    உறுப்பினர் அட்டை விவகாரம் மட்டுமல்லாது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்.