தலைமையிடம் இருந்து தப்பிக்க மாஜிக்கள் செய்யும் வேலை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளாசல்

 
kkssrr


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்  திமுக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.   இது அதிகாரத்தால் கிடைத்த வெற்றி என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.    இதுகுறித்து  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதிலளித்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோட்டூரில் இருந்து பொதுமக்கள் மற்றும் பிரசித்தி பெற்ற குருசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிவகாசி மற்றும் சாத்தூர் ஊர்களுக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. 

kks

 இந்த நிலையில் இன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவகாசி சாத்தூர் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

 இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,    நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.   இதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு இருக்கும் நல்ல பெயர்தான்.   பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற சான்றாக வெற்றி அமைந்திருக்கிறது.  இந்த நான்கு மாத காலத்தில் அதிமுக இருக்குமிடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.

 அந்த கட்சிக்கு இனி எதிர்காலமே இல்லை என்று சொல்கிற தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி அதிகாரத்தால் கிடைத்த வெற்றி என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.   ‘’ எந்த இடத்தில் தகராறு பிரச்சனை நடந்தது என்று ஏதாவது ஒரு இடத்தைகூறினால் கூட நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.  தேர்தல் நேர்மையாக நடந்து கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் முன்னாள் அமைச்சர்கள் தலைமையிடம்  தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.