பாஜகவில் இணையவுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்?

 
thoppu venkatachalam

திமுகவிலிருந்து பாஜகவில் இணைய  போவதாக வெளியான தகவலுக்கு, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மறுப்பு தெரிவித்துள்ளார்..

 தோப்பு வெங்கடாசலம்

இது தொடர்பாக பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்த தோப்பு வெங்கடாசலம், “நான் தற்போது திமுகவில் தான் இருக்கிறேன். கடந்த 10 நாட்களாக யூகங்களின் அடிப்படையில் தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.  மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அரசியல் போட்டி, பொறாமை காரணமாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இது போன்ற தகவல்களை பரப்பி இருக்கலாம். 

பாஜகவில் இருந்தும் ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த அழைப்புகளை ஏற்க மறுத்து விட்டேன். திமுகவின் விசுவாசமிக்க தொண்டனாக செயல்பட்டு வருகின்றேன்” என்றார். 

2011 முதல் 2016ம் ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.